Town News, Uncategorized|

அக்கரைப்பற்று பொதுச் சந்தை வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்தாலோசனை!

அக்கரைப்பற்று மாநகர பொதுச் சந்தை வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இன்று (28) அக்கரைப்பற்று பொதுச் சந்தை பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி WMHS.விஜேதுங்க, போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி P.T. நசீர் மற்றும் பொதுச் சந்தை வர்த்தகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலின் போது, பொதுச் சந்தை வியாபாரிகள் சமகாலத்தில் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அவற்றுக்கான சுமூகமான தீர்வுகளும் முன் வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Search Window