Town News|

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஹஜ் பெருநாள் தொழுகை உள்ளிட்ட இதர கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்…

கிழக்கில் கோவிட் 19 அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அதிக பட்ச சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் ஹஜ் பெருநாள் தொழுகை உள்ளிட்ட இதர கடமைகளை பிராந்திய பொதுமக்கள் எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(19) கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச சுகாதரா வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாசீக், அக்கரைபற்று ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர்கள், பிரதேச பள்ளிவாசல் நிர்வாகிகள் பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள்,மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

One Reply to “கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஹஜ் பெருநாள் தொழுகை உள்ளிட்ட இதர கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்…”

  1. Rifky says:

    Good Work.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Search Window