Town News|

அக்கரைப்பற்றில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் கௌரவ மாநகர முதல்வரால் ஆரம்பித்து வைப்பு!

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட மக்களுக்கான கோவிட் 19 தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று(24) காலை கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களினால் அக்கரைபற்று அஸ்-ஸிராஜ் தேசிய பாடசாலையில் இயங்கும் கோவிட் 19 தடுப்பூசி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ. காதர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டங்களில் அக்கரைப்பற்று பிரதேச பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டனர்.

அக்கரைப்பற்றில் இன்றைய நாளில் கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேலும் பல இடங்களில் இடம்பெற்றன.

அந்தவகையில், அக்கரைப்பற்றில் சுகாதார பிரிவினரால் தடுப்பூசி மையங்களாய் அடையாளப்படுத்தப்பட்ட அக்-ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயம்(தேசிய பாடசாலை)அக்-முஸ்லீம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)போன்ற இடங்களுக்கும் கௌரவ மாநகர பிதா அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள நிலைவரங்களை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Search Window