Covid 19|

கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதில் அக்கரைப்பற்று மக்களின் ஆர்வம் மெச்சத்தக்கது!

உலகளாவிய ரீதியில் கோவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் செயலாற்றும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாக Our World In Data இணையத்தளம் விதந்துரைத்திருக்கும் நிலையில், அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 24,25 ஆம் திகதிகளில் தடுப்பூசியேற்றும் செயற்திட்டம் வெற்றிகரமாய் இடம்பெற்றன.

அக்கரைப்பற்று பொதுமக்கள் தமது சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் காட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் முதற்கட்டமாக இதுவரை 4600 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய காரியாலயம் அறிவித்துள்ளது.

அக்கரைபற்றில் கோவிட்-19 தடுப்பூசியேற்றும் இரண்டாம் கட்ட பணிகள் இவ்வார இறுதியில் இடம்பெறலாம். அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, வழமை போன்று முக கவசம் அணிந்து- சமூக இடைவெளியை பேணி அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு நல்கி,ஒருமித்து செயற்படுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Search Window